
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் காட்டுத்தீயாய் பரவிவருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் டெங்குவிற்கு பலியாகி வருகின்றனர். டெங்குவைத் தடுக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெங்கு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
டெங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்..
டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவது எப்படி?
வீட்டினுள் இருக்கும் காலி டப்பா, தேங்கியிருக்கும் நீர், கழிவுப் பொருட்கள் ஆகியவற்றில் டெங்குவைப் பரப்பும் ஏடிஎஸ் கொசு உற்பத்தியாகிறது. தண்ணீர்த் தொட்டி, சிமெண்ட் தொட்டி, ஆட்டுக்கல், தேங்காய் சிரட்டை, டயர்கள் ஆகியவற்றில் தேங்கியிருக்கும் நீரில் ஏடிஎஸ் கொசு உற்பத்தியாகிறது.
எனவே வெகுநாட்களாக தொட்டிகளில் நீரை தேக்கிவைப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை தேங்கியிருந்தால் இருந்தால் உடனடியாக சுத்தம் செய்து வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மைப்படுத்த வேண்டும்.
டெங்கு பரவாமல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
1. தண்ணீரை குடங்களிலோ வாளிகளிலோ நாட்கணக்கில் சேமித்துவைத்து பயனப்டுத்துவதை தவிர்க்க வேண்டும்.
2. சேமித்துவைக்கும் நீரை முறையாக மூடிவைத்து பயன்படுத்த வேண்டும்.
3. தண்ணீர் சேமிக்கும் தொட்டிகளில் ஆறு நாட்களுக்கு ஒருமுறை உரிய மருந்து தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.
4. மழைநீர் தேங்குவதற்கு வாய்ப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர்கள் ஆகியவை சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை எங்காவது சேர்ந்து கிடந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
5. வீட்டுச்சுவர்கள் மீது டிடிடி மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும் தெருவோரச் சாக்கடைகளிலும் டெல்டாமெத்திரின் மருந்தை தெளிக்கலாம்.
எனவே டெங்குவிலிருந்து மக்களைக் காக்க அரசு எடுக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தூய்மைப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் டெங்குவிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.