பயமுறுத்தும் நவம்பர் டிசம்பர்..! வரத்தொடங்கியது பன்றி காய்ச்சல்..! உடனே இதை செய்யுங்கள் மக்களே..!

By thenmozhi gFirst Published Oct 23, 2018, 7:03 PM IST
Highlights

தற்போது தமிழகத்தில் தொடந்து பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு இவை இரண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆங்காங்கு பன்றிக்காயச்சலுக்கு பலி என்ற செய்தியை கேட்டு மனம் வேதனை கொள்ள செய்கிறது ஒரு பக்கம் பயம் வருகிறது.

தற்போது தமிழகத்தில் தொடந்து பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு இவை இரண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆங்காங்கு பன்றிக்காயச்சலுக்கு பலி என்ற செய்தியை கேட்டு மனம் வேதனை கொள்ள செய்கிறது ஒரு பக்கம் பயம் வருகிறது.

ஆனாலும், டெங்குவோ அல்லது பன்றி காய்ச்சலோ வருவதை எப்படி எல்லாம் முன்கூட்டியே தவிர்க்க  முடியும் என்பதை பார்க்கலாம்.முதலில் இது எப்படி பரவுகிறது என்பதை பார்க்கலாம். இந்த காய்ச்சல் உள்ளவர்கள் தும்பினாலோ அல்லது இரும்பினாலோ எச்சில் மற்றும் சளி மூலம் மற்றவர்களுக்கு அப்படியே பரவக்கூடிய தன்மை கொண்டது  எனவே பொதுவாகவே இரும்பும் போதும் தும்பும் போதும் கை குட்டையை வைத்து இரும்புவது நல்லது.

பன்றிகாய்ச்சல் அறிகுறிகள்

மூக்கு ஒழுகுதல், தொண்டைப்புண், இரும்பல், பசியின்மை, வயிற்ருப்போக்கு, வாந்தி, ஒரு விதமான  சோம்பல் என இது போன்ற அறிகுறிகள் தென்படும்.சரி வாங்க நாம் மேற்கொள்ள வேண்டிய சில பழக்கத்தை பார்க்கலாம். கைகளை நன்றாக கழுவ வேண்டும். விரல்களையும் நன்றாக கழுவி, நகத்தில் அழுக்கு சேர விடாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

தும்பல் இரும்பல் எது வந்தாலும், கை குட்டையை வைத்துக்கொள்வது ஆக சிறந்தது. நல்ல தூக்கம் இருக்க  வேண்டும், அலைச்சல் அதிகமாக இருக்கக்கூடாது.உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, அவ்வப்போது பழச்சாறு மற்றும் தேவையான அளவிற்கு தண்ணீர்   குடிப்பது நல்லது.

பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருப்பவர்கள் வெளி இடங்களுக்கு செல்லாமல் இருப்பது மிகவும் நல்லது.இதை விட முக்கியம் காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

click me!