
தே.மு.தி.கவின் பொருளாளர் ஆன கெத்தோடு கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் மகளிரணி ஆலோசனை கூட்டத்தை நடத்தினார் பிரேமலதா. அதன் பின் செய்தியாளர்களிடம் “மீ 2 ஹேஸ்டேக்கில் தினமும் சர்ச்சைகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பாலியல் ரீதியாக கொடுமைகள் நடக்கிறது! என்று பலரும் பேசுகிறார்கள்.
ஆக்சுவலி நம்ம வாழ்க்கை நம்ம கையிலதான் இருக்குது. நாம உறுதியாக இருந்தால் நம்மை மீறி எங்கேயும் தவறே நடக்க வாய்ப்பே இல்லையே! ‘மீ டூ’வை பெண்கள் தங்களுக்கு பயனுள்ளதாக மாற்றணும், வெறும் விவாத பொருளாக மாற்றக் கூடாது.
பெண்களை ஆண்கள் சகோதரியாக, தோழியாகத்தான் பார்க்கணுமே தவிர தவறா பயன்படுத்தக் கூடாது. ஊசி இடம் கொடுத்தால் தானே நூல் நுழையும்? பெண்கள் உறுதியாக இருந்தால் யாரும் வாலாட்ட முடியாது.” என்று அட்வைஸிவிட்டு சென்றார்.
இந்த தகவல்கள் வெளியே வந்ததும், “இந்தம்மாவோட பேச்சு போயிருக்கிற ஆங்கிளே சரியில்லையே! என்னமோ மீடூ இயக்கத்துல இதுவரைக்கும் பிரச்னைகளை சொல்லியிருக்கிற பெண்கள் எல்லாரும் ஏதோ சர்ச்சையை கிளப்பணுமேன்னு பேசியிருக்கிற மாதிரில்லா சொல்லியிருக்காங்க.
ஊசி வழி கொடுத்தால்தான் நூல் நுழையும்- அப்படின்னு எல்லாருக்கும் தெரியும். ஆனால், இப்போ பிரச்னை அது இல்லையே. இடம் கொடுக்க மறுக்கிற ஊசியை இரும்புக் கம்பிகள் அடிச்சு வளைக்கிறதுதானே பிரச்னையே! ஆனாலும் விஜயகாந்தின் மனைவி இப்படி ‘ஊசி, நூலு’ன்னு பேசுறது ரசிக்கிற மாதிரி மட்டுமில்லை ஜீரணிக்கிற மாதிரி கூட இல்லை.” என்று போட்டுப் பொளந்துவிட்டனர்.
என்னம்மா இப்டி பண்றீங்களே பிரேமா!