
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இல்லாத நிலையை உருவாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன்காரணமாக நெல்லை, மதுரை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்குக் காய்ச்சலால் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்காமல் முடங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பே இல்லை என்ற நிலையை உருவாக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.