முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் - மழை காரணமாக ஒத்திவைப்பு...!!!

Asianet News Tamil  
Published : Aug 11, 2017, 07:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் - மழை காரணமாக ஒத்திவைப்பு...!!!

சுருக்கம்

Murasoli Coral Ground Public meeting Adjournment due to rain

சென்னை நந்தனத்தில் நடைபெற்று கொண்டிருந்த முரசொலி பவளவிழா மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட ‘முரசொலி’ பத்திரிகையின் 75 ஆண்டுகள் நிறைவடைவதால் பவள விழா 2 நாட்கள் நடைபெறுகிறது. 

இந்த விழாவை முன்னிட்டு நேற்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் முரசொலி காட்சி அரங்கம் திறக்கப்பட்டது.

திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம் காட்சி அரங்கை திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., முரசொலி செல்வம், மு.க.தமிழரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைதொடர்ந்து, மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் முரசொலி பவள விழா வாழ்த்தரங்கம் நடைபெற்றது. 

இதையடுத்து இரண்டாவது நாளாக நந்தனத்தில் முரசொலி பவள விழா நடைபெற்று கொண்டிருந்தது. 

இந்நிலையில் மழை குறுக்கிட்டதால் முரசொலி பவளவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!