
சென்னையில் கனமழை பெய்து வருவதால் 12 விமானங்கள் வருவதில் தாமதமாகியுள்ளது.
வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகத்தில் நாளை முதல் 14 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .
அதன் படி, சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ள்ளதாகவும், தென் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவிதிருந்தது.
இந்நிலையில், சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் சாலிகிராமம், கோயம்பேடு, அண்ணா நகர், அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராமம், நந்தனம், சைதாபேட்டை, கிண்டி, தேனாம்பேட்டை, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிபூண்டி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, செவிலிமேடு, ஒரிக்கை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனால் சென்னை வர வேண்டிய 12 விமானங்கள் தாமதமாக வருகின்றன.