காவிரி மீட்பு போராட்டத்தில் பொய் வழக்கு போட்டு கைது செய்தவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்...

First Published Apr 16, 2018, 8:31 AM IST
Highlights
Demonstrate the release of detainees in Cauvery rescue case


நாகப்பட்டினம் 

சென்னையில் நடந்த காவிரி மீட்பு போராட்டத்தில் பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி நாகையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற காவிரி மீட்பு போராட்டத்தில் பங்கேற்ற மனிதநேய ஜனநாயக கட்சி பொருளாளர் ஹரூன்ரசித் உள்பட கட்சியினர் மீது தடியடி நடத்தி, அவர்கள் மீது பொய்வழக்கு போட்டு, கைது செய்த காவலாளர்களைக் கண்டித்தும், 

மனிதநேய ஜனநாயக கட்சியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற்று, அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும், நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஔரித்திடலில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாகை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் பரக்கத்அலி தலைமை தாங்கினார். மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக் பங்கேற்று பேசினார்.

"காவிரி மீட்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சி கட்சியினர் மீது தடியடி நடத்தி, அவர்கள் மீது பொய்வழக்கு போட்டு, கைது செய்த காவலாளர்களைக் கண்டித்தும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற்று, உடனே விடுதலை செய்ய வேண்டும்" என்றும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்டப் பொறுப்பாளர்கள் சாகுல்ஹமீது, ஜாகிர்உசேன், முஜிபுர்ரகுமான், முன்னாள் மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், ஷேக்மன்சூர், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர். 

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நகர பொருளாளர் அஜிஸ்ரகுமான் நன்றி தெரிவித்தார்.  

click me!