டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மிரட்டும் கனமழை... பொதுமக்கள் பீதி!

By vinoth kumar  |  First Published Nov 29, 2018, 10:04 AM IST

காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளது. 


காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளது. 

வங்க கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடியது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து மழை படிப்படியாக குறைந்து கடந்த இரண்டு நாட்களாக வறண்ட வானிலையே நிலவு வருகிறது. இந்நிலையில், நவம்பர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை கடலோர மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

Tap to resize

Latest Videos

undefined

அதன்படி இன்று காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம், பாபநாசம், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இதனிடையே டெல்டா மாவட்டங்களில் மழை தொடர்வதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் தற்போது மழை மிரட்ட தொடங்கியுள்ளது. நிவாரண பொருட்கள் வழங்கி வரும் இந்த சமயத்தில் மழை பெய்வதால் பணிகள் பாதிக்கப்படும் என மக்கள் கவலை அடைந்துள்ளனர். ஏற்கனவே 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளதால் டெல்டா மக்கள் பீதி அடைந்துள்ளனர். 

click me!