நாட்டிற்கே சோறு போட்டோம், இப்போ நாங்க சோறு, தண்ணி இல்லாம தவித்து வருகிறோம் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.
நாட்டிற்கே சோறு போட்டோம், இப்போ நாங்க சோறு, தண்ணி இல்லாம தவித்து வருகிறோம் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.
கஜா புயல் கடந்த வாரம் நாகை வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் 6 மாவட்டங்கள் பெருத்த சேதம் ஏற்பட்டது. முக்கியமாக டெல்டத மாவட்டங்களான நாகை, தஞ்சை மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இங்குள்ள மக்களின் வாழவாதாரம் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
புயலின் ருத்தரதாண்டவம் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத ஒன்று என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். நாகை, தஞ்சை மாவட்டங்களில் 5 நாட்கள் ஆகியும் மின்சாரம், குடிநீர், குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எங்கு பார்த்தாலும் மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து கிடக்கின்றன. மீட்பு பணிகளும் மந்தமாக நடைபெறுகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆறுதல் சொல்லக்கூட அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.,க்களோ, அரசு அதிகாரிகளோ வரவில்லை என குமுறல் உடன் தெரிவித்துள்ளனர். பல்வேறு இடங்களில் புயல் பாதித்து 2 நாட்களுக்கு பிறகு வந்த அமைச்சர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். கிராமங்களில் வசிப்போர், தாங்களாகவே முன்வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. குழந்தைகள், நோயாளிகள் மற்றும் முதியோர், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அரசு பள்ளியில் தஞ்சம் அடைந்துள்ள அவர்கள், சொந்த செலவில், உணவு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இதனால் டெல்டா விவசாயிகள் சொல்ல முடியா துயரம் அடைந்துள்ளனர்.
இந்த மாதிரி ஒரு சேதத்தை, நான் இதுவரை பார்த்தில்லை. தெரியாத மனிதர்கள் கூட, வீடு தேடி வந்து விட்டால், பசியாற்றி தான், எங்களுக்கு பழக்கம். ஊருக்கே சோறு போட்ட நாங்கள், குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தவிக்கிறோம் என கூறும் போது அனைவரும் கண்களில் கண்ணீர் வரழைத்துள்ளது.