
தீபாவின் தலைமையில் அதிமுக வை கைப்பற்றுவோம்…. போட்டுத் தாக்கும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக வுக்கு தலைமை ஏற்பது குறித்து பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள், எம்பி க்கள், எம்எல்ஏக்கள் கட்சி நிர்வாகிக்ள உள்ளிட்டோர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்,
ஆனால் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் ஜெ வின் அண்ணன் மகள் தீபா கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தீபாவும் தனது அரசியல் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார்.
கடந்த 17 ஆம் தேதி எம்ஜிஆர் நினைவித்தில் அஞ்சலி செலுத்திய தீபா, ஜெயலலிதாவின் பிறந்த நாளின் போது தனது முழு திட்டம் குறித்து அறிவிப்பதாக கூறியிருக்கிறார்.
இதனிடையே தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் கழக தொண்டர்கள் பேனர் வைத்தும், போஸ்டர்கள் ஒட்டியும் வருகின்றனர். தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் முன்னாள் எம்பி பி.ஹெச்.பாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் தீபாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தீபாவின் தலைமையில் அதிமுக வை கைப்பற்றி, கட்சி அலுவலகம் உட்படஜெயலலிதாவின் சொத்துக்களை மீட்போம் என்று சிவகங்கை தொகுதி முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு தீபாதான்..கட்சியின் பொதுக் குழுவை நடத்தத்தான் நாங்கள் ஆதரவு அளித்தோம்.சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.
அவருக்கு கட்சியில் ஆதரவு இல்லை..அதிமுகவை கட்டிக்காத்து வருவதாக கூறி வரும் நடராஜன் முதுகெலும்பில்லாதவர் என சராமாரியாக குணசேகரன் குற்றம் சாட்டினார்.