ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்.
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். புயலாக கரையை கடக்குமா? தமிழ்நாட்டில் கரையை கடக்குமா? என்பதை இனி வரும் நாட்களில் தீவிரமாக கண்காணித்த பிறகே கூற இயலும். வங்கக்கடலில் டிசம்பர் 2ம் தேதி புயல் உருவாகக்கூடும்.
இதையும் படிங்க;- Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 10 மாவட்டங்களில் தரமான சம்பவம் இருக்கு.. வானிலை மையம் அலர்ட்..!
இதன் காரணமாக டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஆகையால், தமிழகம், புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- chembarambakkam: உஷார்... செம்பரம்பாக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்தாச்சு... அடையாறு கரையோர மக்களுக்கு அலர்ட்
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் 70 கிலோ மீட்டர் வரை காற்றுவீசக்கூடும் என்பதால் ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் இன்றைக்குள் கரை திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 8 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.