டெங்குவால் தொடரும் உயிரிழப்பு; இன்று ஒரே நாளில் 7 பேர் பலி

 
Published : Oct 22, 2017, 06:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
டெங்குவால் தொடரும் உயிரிழப்பு; இன்று ஒரே நாளில் 7 பேர் பலி

சுருக்கம்

Death due to dengue 7 people die today

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வெகு வேகமாக பரவி வருகிறது. டெங்குவை தடுக்க தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் டெங்கு பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு நாளும் 10 முதல் 15 வரையிலானோர் உயிரிழந்து வருகின்றனர்.

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இன்று மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாகை மாவட்டத்தல் டெங்கு காய்ச்சலால் 11 ஆம் வகுப்பு மாணவன் இன்று உயிரிழந்தார்.

கீழ்வேளூரை அடுத்துள்ள ஆணைமங்கலத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சுதர்சன் (11) வைரஸ் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நரேஷ்குமார் என்ற மாணவன் உயிரிழந்தார்.

தர்மபுரி, ராஜாதோப்பு கிராமத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை ஹரிஹரன், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தான்.

இதேபோல் வேதாரண்யம் அருகே நெய் விளக்கை சேர்ந்த 16 வயது சிறுமி அனுசுயா, டெங்கு பாதிப்புக்கு உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியநேந்தலில் இரண்டரை வயது குழந்தை சிவகுரு வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தார். 

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இன்று மட்டும் 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு