அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

First Published Apr 26, 2017, 4:27 PM IST
Highlights
dearness alllowance hike to 4 percentage from may 1st


தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிப்பதாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.244  முதல் ரூ.3080  வரை அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். 

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் இந்த அகவிலைப்படி உயர்வால் 18 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவர். 

முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக இருந்த போது கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!