Sunday lockdown in Tamilnadu:தொடரும் ஞாயிறு லாக்டவுன்..முழுஊரங்கிற்கான ஒத்திகையா?தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?

By Narendran SFirst Published Jan 21, 2022, 5:01 PM IST
Highlights

கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் நாளை மறுநாளும் முழூஊடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது மக்களிடையே தமிழகத்தில் மீண்டும் முழூஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் நாளை மறுநாளும் முழூஊடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது மக்களிடையே தமிழகத்தில் மீண்டும் முழூஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா கண்டறியப்பட்ட நாள் முதல் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா முதல் அலையின் போது கடும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அப்போது தடுப்பூசியும் கண்டுப்பிடிக்காத சமயம். பின்னர் தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இதனால் கொரோனாவின் 2வது அலை வேகமெடுக்காமல் சற்றே குறைய தொடங்கியது. இருந்தபோதிலும் 2 ஆண்டுகளாக கடும் ஊரடங்கு காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்படி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டதை அடுத்து மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் ஒமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. அதேவேளையில் கொரோனாவின் 3ஆம் அலையும் வேகமெடுத்துள்ளது. இதை அடுத்து மீண்டும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததோடு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. மேலும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், நாளை மறுநாளும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள்  ஆட்டோக்கள், வாடகை கார்களில் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றும், ஏற்கெனவே முழு ஊரடங்கு நாட்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட அத்தியாவசிய செயல்பாடுகள் அனைத்திற்கும் அனுமதி உண்டு எனவும் அரசு கூறியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் 23 ஆம் தேதியும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள் இயக்கப்படும் எனவும், அனைத்து மாவட்ட ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் வழக்கமான ஆட்டோக்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையும் இவ்வாறு தான் ஊரடங்கு விதிக்கப்பட்டு அது படிபடியாக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு முழூஊரடங்காக மாற்றப்பட்டது. தற்போது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் அதேபோல் உள்ளதால் தமிழகத்தில் மீண்டும் முழூஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. 

click me!