
தகாத உறவை, தந்தை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மகள், சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்ற சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா (52). கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கருப்பையா உயிரிழந்தார். நல்ல உடல் நிலையில் இருந்த கருப்பையா திடீர் என்று உயிரிழந்தது குறித்து அவரது உறவினர்கள் சந்தேகமடைந்தனர். இது தொடர்பாக அவர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கருப்பையாவின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் கருட்பபையாவின் உடலில் விஷம் இருந்தது தெரியவந்தது.
கருப்பையாவின் மரணம் தொடர்பாக வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கருப்பையாவுக்கு வைக்கப்பட்ட உணவில் விஷம் வைத்து கொள்ளப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனை கருப்பையாவின் மகள் முருகேஸ்வரி செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீசில் முருகேஸ்வரி கூறியதாவது; தனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என்றும், கணவர் வேறிடத்தில் வேலை செய்து வருவதாகவும் கூறினார்.
கணவர் வேறிடத்தில் வேலை செய்து வந்த நிலையில், தற்போது வேறு ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டது. இதனை எனது தந்தை கருப்பையா பலமுறை கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்து சாப்பாட்டில் விஷம் வைத்து தந்தையைக் கொன்றேன் என்று போலீசில் கூறியுள்ளார். இதையடுத்து முருகேஸ்வரியை போலீசார் கைது செய்துள்ளனர்.