காற்றழுத்த தாழ்வு நிலை வலுபெறுகிறது - வடமாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Asianet News Tamil  
Published : Nov 03, 2016, 12:45 AM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
காற்றழுத்த தாழ்வு நிலை வலுபெறுகிறது - வடமாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சுருக்கம்

வடகிழக்கு பருவ மழை  தீவிரமடையும் வகையில் வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் அடுத்த சில தினங்களில் மழைக்கு வாய்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை நகரில் முதன் முறையாக இன்று பரவலாக பல பகுதிகளிலும் கணிசமான அளவு மழை பெய்துள்ளது.

தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையானது இன்று மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமக கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. 

காற்று இடஞ்சுழியாக சுழல்வதால் சென்னை உட்ப்ட தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் இன்று நாள் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. சென்னை நகரைப் பொருத்தவரை இன்றைக்கு பலத்த மழைக்கு வாய்ப்பில்லை. இருப்பினும் விட்டுவிட்டு மழை பெய்யும்.

தமிழகத்தின் பிற பகுதிகளுக்கான வானிலை அறிவிப்பு:

ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். திருவள்ளூர் முதல் டெல்டா பகுதிவரை விட்டுவிட்டு மழை பெய்யும்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 20 January 2026: தம்பிகளுக்கு ஆதி குணசேகரன் கொடுத்த சீக்ரெட் டாஸ்க்... ஆக்‌ஷனில் இறங்கிய கதிர் - எதிர்நீச்சல் தொடர்கிறது
மகளிர் உதவித்தொகை 150% உயர்வு.. இனி ரூ.1000 இல்ல ரூ.2500.. பிப்ரவரி முதல் வழங்க முதல்வர் உத்தரவு