காற்றழுத்த தாழ்வு வலு பெற்றது - சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு கனமழை

Asianet News Tamil  
Published : Nov 03, 2016, 03:37 AM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
காற்றழுத்த தாழ்வு வலு பெற்றது - சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு கனமழை

சுருக்கம்

வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: நேற்று அந்தமான் கடல்பகுதியில் மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் நோக்கி நகர்ந்து நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி மற்றும் தமிழக வடமாவட்டங்களில்அனேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் சில இடங்களில் சில இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை விட்டு விட்டு மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

விஜய் 2வது முறை CBI அலுவலகத்தில் ஆஜர்… கேள்விகள் என்ன? முழு அப்டேட்
விஜய்யை திக்குமுக்காட வைத்த சிபிஐ.. 6 மணி நேரம்.. தளபதிக்கு தலைவலி கொடுத்த 'அந்த' கேள்விகள்!