மிரட்டும் ”அசானி புயல்”.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை..! வானிலை மையம் அப்டேட்.

Published : May 08, 2022, 02:47 PM IST
மிரட்டும் ”அசானி புயல்”.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை..! வானிலை மையம் அப்டேட்.

சுருக்கம்

வங்கக்கடலில் நிலவும் அசானி புயல் வடமேற்கு திசையில்‌ நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில்‌ மத்திய கிழக்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ தீவிர புயலாக வலுபெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தென்‌ கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு
மண்டலம்‌, மேற்கு-வடமேற்கு திசையில்‌ நகர்ந்து இன்று காலை “அசானி” புயலாக வலுப்பெற்று தென்‌ கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவுகிறது. இது வடமேற்கு திசையில்‌ நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில்‌ மத்திய கிழக்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ தீவிர புயலாக வலுபெறக்கூடும்‌. 

இது மேலும்‌ வடமேற்கு இசையில்‌ நகர்ந்து 10.05.2022 அன்று மாலை வட ஆந்திரா-ஒரிசா கடற்கரை ஓட்டிய மத்திய மேற்கு மற்றும்‌ அதை ஓட்டிய வட மேற்கு வங்க கடல்‌ பகுதியில்‌ நிலவக்கூடும்‌. அதன்‌ பிறகு வடக்கு- வடகிழக்கு திசையில்‌ ஒரிசா கடற்கரை ஒட்டிய வடமேற்கு வங்க கடல்‌ பகுதியை நோக்கி நகரக்கூடும்‌.

08.05.2022. 09.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. டெல்டா மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர்‌, அரியலூர்‌,
கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, கடலூர்‌, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

10.05.2022 முதல்‌ 12.05.2022 வரை: வட தமிழகம்‌ , புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

அதிகபட்ச வெப்பநிலை:

தயிழகத்தில்‌ அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரிரு இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ்‌ அதிகமாக இருக்கக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ இல இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

08.05.2022: தென்கிழக்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 95 முதல்‌ 105 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 115 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

09.05.2022: மத்திய வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 105 முதல்‌ 115 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 125 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

10.05.2022: மத்திய மேற்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய வட மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 95 முதல்‌ 105 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 115 இலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.வடக்கு ஆந்திர கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 இலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

11.05.2022: வட மேற்கு மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 80 முதல்‌ 90 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 100 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. ஒரிசா கடற்கரை மற்றும்‌ அதனை ஓட்டிய
வடக்கு ஆந்திரா கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

12.05.2022: வட மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 60 முதல்‌ 70 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 80 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌. ஓரிசா கடற்கரை மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40
முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாளில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. ஆழ்‌ கடலில்‌ உள்ள மீனவர்கள்‌ உடனடியாக கரை இரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Asani: இன்று உருவாகிறது அசானி புயல்.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பல பெண்களிடம் தீராத விளையாட்டு பிள்ளையாக இருந்த மருமகன்.! விஷயம் தெரிந்த மாமனார்.. கதறும் மகள்.. நடந்தது என்ன?
உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! பிப்ரவரி 15ம் தேதி முதல் தரமான சம்பவம்.. வானிலை மையம் சூப்பர் அப்டேட்!