அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டி படுகொலை; முன் விரோதமா? அரசியல் கொலையா?

 
Published : Feb 13, 2017, 07:54 AM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டி படுகொலை; முன் விரோதமா? அரசியல் கொலையா?

சுருக்கம்

காட்பாடி

காட்பாடியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற அதிமுக முன்னாள் கவுன்சிலர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முன்விரோதாமா? அல்லது அரசியல் கொலையா? என காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாநகராட்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜி.ஜி.ரவி (55). தொழில் அதிபரான இவர், வேலூர் அருகே பொறியியல் கல்லூரி நடத்தி வந்தார்.

இந்த நிலையில் இவர் நேற்று இரவு 8-30 மணியளவில் காட்பாடியில் சித்தூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் வீட்டுத் திருமண வரவேற்பு விழாவுக்கு காரில் சென்றார்.

திருமண மண்டபத்திற்கு சென்றதும் மண்டபத்திற்கு வெளியே கேட் அருகில் ஒட்டுநர் காரை நிறுத்தினார்.

ஜி.ஜி.ரவி காரில் இருந்து இறங்கினார். ஓட்டுநர் காரை ஓரமாக நிறுத்துவதற்காக சென்றதால் ஜி.ஜி.ரவி திருமண மண்டபத்தின் வாசல் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் ஒன்று அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்து  கண் இமைக்கும் நேரத்தில் ஜி.ஜி.ரவியை சரமாரியாக வெட்டியது.

இதைப் பார்த்ததும் ஓட்டுநர் காரை நிறுத்தி விட்டு ஓடிவந்தார். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டது.

மர்ம கும்பல் வெட்டியதில் ஜி.ஜி.ரவியின் தலை, கழுத்தில் வெட்டு விழுந்து ரத்தம் கொட்டியது. இதனால் அவர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். திருமணமண்டபத்தில் ஒருவர் வெட்டப்பட்டதை பார்த்ததும் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக திருமண மண்டபத்தின் வாசல் மூடப்பட்டது. ஜி.ஜி.ரவி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியம் தலைமையில் ஆய்வாளர்கள் பாண்டி, அறிவழகன் மற்றும் காவலாளர்கள் விரைந்து வந்தனர். அவர்களை ஜி.ஜி.ரவியின் உறவினர்கள் முற்றுகையிட்டு மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தரவேண்டும் என்று வாக்குவாதம் செய்தனர்.

காவலாளர்கள் சமரசம் செய்தும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திருமண மண்டபத்திற்குள் புகுந்து அங்கிருந்த பூந்தொட்டிகளை அடித்து உடைத்தனர். இதனால் அவர்களை காவலளர்கள் தடியடி நடத்தி அங்கிருந்து கலைத்தனர்.

பின்னர் கொலை செய்யப்பட்ட ஜி.ஜி.ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜி.ஜி.ரவி கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. கடந்த 2015 செப்டம்பர் மாதம், ஜிஜி.ரவியை பக்தர் வேடத்தில் வந்து கொலை செய்ய முயன்ற ரௌடி மகாவை ஜி.ஜி.ரவியின் மகன்கள் பெரிய கல்லைப் போட்டுக் கொண்டனர்.

அதற்கு பழிவாங்க ரௌடி மகா கூட்டாளிகள் ஜி.ஜி.ரவியை வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அல்லது அரசியல் பகை காரணமாக கூட கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஜி.ஜி.ரவி கொலை செய்யப்பட்ட தகவல் காட்டுத்தீ போல பரவியதால் காட்பாடி மற்றும் வேலூரில் கடைகள் அடைக்கப்பட்டன.

மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க முக்கிய இடங்களில் காவலாளர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

இந்த கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இது குறித்து விருதம்பட்டு காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடுரோட்டில், அரிவாளர் முன்னாள் கவுன்சிலர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்