
மக்களுக்கு மதுவின் மீதான விருப்பம் எப்போதும் தீராத ஒன்றாகவே உள்ளது. மதுவை ஒழிக்க எத்தனையோ மரணங்கள் நடந்த தமிழக்த்தில்தான் மதுகடை வேண்டி விண்ணப்பங்களும் வருகின்றன
விருதுநகர் மாவட்டம் காரியபட்டியை சேர்ந்த கந்தன் டாஸ்மாக் சரக்கு குடிப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த ஒரிஜினல் குடிமகன் குடிப்பதற்கு மதுக்கடைகள் இல்லையென மனமுடைந்து கோரிக்கை கடிதம் ஒன்றை முதல்வருக்கு எழுதியுள்ளார்.
உயர்நீதி மன்ற உத்தரவின்படி மதுபானக் கடைகள் யாவும் மூடப்பட்டதால் குடிப்பதற்கு தினந்தோறும் மிகவும் சிரமப்படுவதாக கூறி மதுபானக்கடை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சந்தையில் குவார்ட்டர் விலை 200 ரூபாய்க்கு விற்கப்படுவதை கண்டித்தும் முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை கடித்ததை எழுதியுள்ளார்.
கருணை கூர்ந்து குவாட்டர் விலை குறைக்கச் சொல்லி தன் விண்ணப்பத்தை அளித்து அதன் நகலை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், மாவட்ட காவல்துறை ஆணையருக்கும் அனுப்பியுள்ளார்.