பிரபல ஸ்வீட் ஸ்டாலில் மிச்சர் மற்றும் இனிப்புகளில் கரப்பான் பூச்சி கிடந்த உணவை சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக வாடிக்கையாளர் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மிச்சரில் கரப்பான் பூச்சி
கிழக்கு தாம்பரம் பாரதமாத சாலையில் லோ யூ என்ற பிரபலமான இனிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த சுவிட்ஸ் ஸ்டாலில் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த பாபு என்பவர் இனிப்பு மற்றும் மிச்சர் வாங்கி சாப்பிட்டு உள்ளார். அப்போது அவருக்கு திடீரென லேசான மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. தான் சாப்பிட்ட இனிப்பு மற்றும் மிச்சர் இருந்தால் எதோ பிரச்சனை என எண்ணி கடைகளில் கடையில் வந்து கேட்டபோது ஊழியர்கள் சரிவர பதில் அளிக்காமல் மழுப்பலான பதில் அளித்துள்ளனர். அப்போது இனிப்புகள் வைக்கப்பட்டுள்ள பாக்ஸ்களை ஆராய்ந்த போது அதில் ஏராளமான கரப்பான் பூச்சிகள் மற்றும் பாசிகள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து கடை ஊழியர்களுடன் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கடை ஊழியர்களோடு வாக்குவாதம்
இதனையடுத்து உடனடியாக கடையை அடைத்து விட்டு கடை ஊழியர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.. பிரபலமான இனிப்பகத்திலே இது போன்ற சுகாதாரமற்ற முறையில் இருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இது போன்ற பிரபல இனிப்புகளின் சோதனை நடத்தி தரமான பொருட்களை விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வாடிக்கையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.