Cuddalore Corporation Result 2022 :கடலூர் மாநகராட்சியில் 20 இடங்களில் திமுக முன்னிலை

Published : Feb 22, 2022, 09:16 AM ISTUpdated : Feb 22, 2022, 12:44 PM IST
Cuddalore Corporation Result 2022 :கடலூர் மாநகராட்சியில் 20 இடங்களில் திமுக முன்னிலை

சுருக்கம்

யார் கடலூர் மாநகராட்சியை கைப்பற்றுவது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி கடலூர் மாநகராட்சியில் 20 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.. அதன் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் இதோ உங்களுக்காக..

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை  இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கடலூர் மாநகராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி  வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

கடலூர் மாநகராட்சியை முதன்முறையாக கைப்பற்ற போவது யார் என மக்களிடையே இருந்த கேள்விக்கான பதில் நாளை தெரிய வர உள்ளது, திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அதிமுக சார்பில் மேயர் பதவிக்கான வேட்பாளராக 27 ஆவது வார்டில் போட்டியிட்ட சங்கீதா சவுந்தரராஜன் எனக் கூறப்படுகிறது, திமுக சார்பில் 2 ஆவது வார்டில் போட்டியிட்ட கீதா குணசேகரன் அல்லது 20 ஆவது வார்டில் போட்டியிட்ட சுந்தரி ஆகிய இருவரில் ஒருவர்தான் மேயர் வேட்பாளர் என கூறப்படுகிறது.

எனவே இந்தமுறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் பகுதி வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகின்றனர் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடலூர் மாநகராட்சியில் 20 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி