
தமிழகத்தில் உள்ள 4500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் மீண்டும் நேரடி பயிர்கடன் மற்றும் நகைக்கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கறுப்புப் பணம் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிப்பதாக கூறி கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என நரேந்திர மோடி அறிவித்தார்.
தமிழகத்தில் நடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதிக்கு முன்பு வரை அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும், விவசாயிகளுக்கு நேரடியாக பயிர் மற்றும் நகைக் கடன்கள் வழங்கப்பட்டு வந்தன.
ஆனால் மோடியின் அறிவிப்புக்குப் பின்னர் மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கினால் மட்டுமே கடன் வழங்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 4500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கவும், நகைக்கடன் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க அவசியமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.