ஏரியில் குதித்து மாணவி தற்கொலை! ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய  கணவன், மனைவி! விஷ எரும்பு கடித்ததில் பெண் பலி!

 
Published : Apr 06, 2018, 04:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
ஏரியில் குதித்து மாணவி தற்கொலை! ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய  கணவன், மனைவி! விஷ எரும்பு கடித்ததில் பெண் பலி!

சுருக்கம்

crime news Today in chennai

கணவன், மனைவி ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த புறநகர் பகுதியான நாவலூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். இவர்  தனியார் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். 

இவரது மனைவி விஜயா. இருவருக்கும் திருமணமாகி மூன்றரை வருடங்கள் ஆகின்றன. இருவரும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனமுடைந்து காணப்பட்டனர். இந்தநிலையில், இவர்களது வீட்டின் கதவு நேற்று காலையில் இருந்து திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் நேற்று இரவு 8 மணிக்கு கதவை உடைத்து பார்க்கும் போது, கணவன், மனைவி ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.  

தகவலறிந்து வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விஷ எறும்பு கடித்ததால் இளம் பெண் பலி!

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அடூர் பகுதியை சேர்ந்தவர் சூசி ஜெஃப்பி, தனது குடும்பத்தாருடன் சவுதி அரேபியா நாட்டின் தலைநகர் ரியாத் நகரில் வசித்து வந்தார்.

கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி மிகவும் கொடிய விஷத்தன்மை வாய்ந்த ஒருவகை எறும்பு கடித்ததால் ரத்தத்தில் பரவி இருந்த நச்சுத்தன்மை முறிவு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சூசி அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புழல் ஏரியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

சென்னையை அடுத்த மாதவரம் பகுதியை சேர்ந்த நிவேதா. இவர், சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்தார். நேற்றுமுன்தினம் மாலை புழல் ஏரிக்கு சென்ற இவர் மதகு அருகே சென்ற அவர் நின்று திடீரென ஏரிக்குள் குதித்து விட்டார். நீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள், செங்குன்றம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் புழல் ஏரிக்கு விரைந்து சென்று நிவேதா உடலை தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை. நேரம் செல்ல செல்ல இருள் சூழ்ந்து விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நேற்று காலை நிவேதா உடல் ஏரியில் மிதந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போலீசார், ஏரியில் மிதந்த கல்லூரி மாணவி நிவேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவி நிவேதா காதல் தோல்வியால் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

திருவள்ளூர் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. நாட்டையே உலுக்கிய சம்பவம்.. கயவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
கண்ணாடி முன் நின்று கல்லெறியும் திமுக.. ஸ்டாலினுக்கு சுளுக்கெடுத்த தளபதி விஜய்!