
மன்னார்குடி அருகே இரு நண்பர்களிடையே கிரிக்கெட் போட்டி நடத்துவதில் ஏற்பட்ட தகராறில், ஒருவரை மற்றொருவர் கத்தியால் குத்தினார். இந்த சம்பவத்தால் நண்பர்கள் இருவரும் எதிரிகளாக மாற கிரிக்கெட் காரணமானது.
கோட்டூரை அடுத்த வாட்டார் கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிசாமி மகன் ஆனந்தராஜ் (25). அதே பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (24). இவர்கள் இருவரும் நண்பர்கள். இருவரும் ஊரில் கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கான வேலையில் சில நாள்களாக ஈடுபட்டு வந்தனர்.
இவர்களுக்குள் கிரிக்கெட்டால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு நண்பர்களாகிய இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆனந்தராஜை, வெங்கடேசன் கத்தியால் குத்தினார். பின்னர், வெங்கடேசன் அங்கிருந்து தப்பியோடி மாயமானார்.
இதில் காயமடைந்த ஆனந்தராஜ் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகலறிந்து வந்த திருக்களர் காவலாளார்கள் வழக்குப் பதிவு செய்தனர். வெங்கடேசனையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாட்டு நண்பர்களை உயிரைக் கொல்லும் எதிரிகளாக மாற்றிவிட்டதை நினைத்து அந்த பகுதி மக்கள் சோகமடைந்தனர். இது இந்தியாவின் சகோதர நாடான பாகிஸ்தானுக்கும் பொருந்தும். கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் போராக பார்க்கக்கூடிய மனநிலையில் மக்களை கொண்டுவந்து விட்ட அரசே இதற்கு பொறுப்பு.