தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்த தமிழக அரசு!

By vinoth kumarFirst Published Nov 2, 2018, 12:03 PM IST
Highlights

தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவையடுத்து பட்டாசு வெடிப்பதற்கான 2 மணி நேரத்தை தமிழக வெளியிட்டுள்ளது. 

தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவையடுத்து பட்டாசு வெடிப்பதற்கான 2 மணி நேரத்தை தமிழக வெளியிட்டுள்ளது. 

முன்னதாக பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 23-ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில் தீபாவளி விழாவின் போது நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  

இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புக்கள் எழுந்தது. இதனையடுத்து பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழக அரசு சார்பிலும் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியும் என்றும் கண்டிப்புடன் தெரிவித்தது. மேலும் அந்த 2 மணி நேரத்தை மாநில அரசே முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தது.

 

அதன்பின்னர் உச்சநீதிமன்றம் அறிவுரை ஒன்றை வெளியிட்டது. அதில் தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அதிகாலையில் 4 மணி முதல் 5 மணி வரை, இரவில் 9 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என தெரிவித்திருந்தது. இந்த நேரத்தை மாநில அரசு மாற்றம் செய்யலாம் என்றும் கூறியது. இந்நிலையில் தற்போது பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாநில அரசு வெளியிட்டுள்ளது. தீபாவளி தினத்தன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என கூறியுள்ளது. 

குறைந்த ஒலி சத்தத்துடன் மற்றும் குறைந்த அளவில் மாசுபாட்டை ஏற்படுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுபாட்டை ஏற்படுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்கலாம். உள்ளாட்சி அமைப்புக்களின் அனுமதியுடன் பொதுமக்கள் ஒன்று கூடி திறந்த வெளியில் பட்டாசுகள் வெடிக்க முயற்சிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுதலங்கள் அருகில் வெடி வெடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

click me!