நல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி.. உடல்நிலை எப்படி இருக்கு?

Published : Dec 14, 2025, 09:20 AM IST
Nallakannu

சுருக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நேர்மையான அரசியல் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும், எளிமையின் வடிவம் ஐயா நல்லகண்ணு (100) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி வீட்டில் கீழே தவறி விழுந்த நல்லகண்ணுவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சுமார் ஒன்றை மாதம் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார். அதற்கு அடுத்த ஒரு வாரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

இந்த நிலையில் தான் மூச்சுத்திணறல் காரணமாக நல்லகண்ணு மீண்டும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் விரைவில் உடல்நலம் தேறி வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

என்னை அந்த மாதிரி நினைக்காதீர்கள்.. நான் எந்த தவறும் செய்யவில்லை.. திருச்சி மக்களிடம் உருகிய கே.என்.நேரு!
காமராஜரை தப்பா பேசிய திமுக ஆட்சியை கவிழ்ப்பேன்.! திருச்சி வேலுச்சாமி ஆவேசம்