தேயிலை தோட்டத்துக்குள் எலும்புகூடாக கிடந்த பசுமாடு - சிறுத்தைப்புலியின் தொடர் வேட்டையால் மக்கள் பீதி...

First Published Mar 15, 2018, 9:23 AM IST
Highlights
cow skeleton lying in tea plantation - people panicked by the hunt of a leopard


நீலகிரி

நாமக்கல்லில், தேயிலை தோட்டத்துக்குள் சிறுத்தைப்புலி கடித்து கொன்ற பசு மாட்டின் எலும்புகூடாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர் அட்டகாசத்தி ஈடுபட்டுள்ள சிறுத்தைப்புயை பிடிக்க வேண்டி பீதியில் இருக்கும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோரஞ்சால், குறிஞ்சி நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். 

கடந்த சில மாதங்களாக இந்தப் பகுதியில் சிறுத்தைப்புலியின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. சிறுத்தைப்புலி இரவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கடித்து கொன்று வருவதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது பசுமாட்டை நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். ஆனால், மாலையில் பசுமாடு வீடு திரும்பாததால் பல இடங்களில் செல்வராஜ் மாட்டை தேடினார். 

அப்போது, தேயிலை தோட்டத்துக்குள் சிறுத்தைப்புலி கடித்து பசு மாடு எலும்புகூடாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த சேரம்பாடி வனச்சரகர் கணேசன், வன காப்பாளர் ராபர்ட் வில்சன், காவலர் பொட்டுராஜ் உள்ளிட்ட வனத்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.  அப்போது பசு மாட்டின் உடலை சிறுத்தைப்புலி தின்று விட்டுச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து கால்நடை மருத்துவர் பிரபு மாட்டின் உடலை உடற்கூராய்வு செய்தார். 

சிறுத்தைப்புலியின் தொடர் அட்டகாசத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே, சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

click me!