தொடரும் பள்ளிக்கூட சர்ச்சைகள்.. ஆசிரியர் சஸ்பெண்ட்

By Thanalakshmi VFirst Published Dec 12, 2021, 6:28 PM IST
Highlights

கோவையில் யூனிபார்ம் டைட்டாக அணிந்து வந்ததால் 11 ஆம் வகுப்பு மாணவனை கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில்  ஆசிரியரை தனியார் பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
 

சி.எம்.எஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்த அந்த மாணவன் பள்ளியில் கொடுத்த யூனிபார்ம் பெரிதாக இருந்ததால் ஆல்ட்டர் பண்ணி டைட்டாக போட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக பள்ளியில் பணிபுரியும் இயற்பியல் ஆசிரியர் சிவரஞ்சித் மாணவனை கொடூரமாக தாக்கியதாக சொல்லப்படும் நிலையில் மாணவனின் தந்தை சரவணம்பட்டி போலீசாரிடம் புகாரளிக்கவே ஆசிரியர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவனை தாக்கிய குற்றச்சாட்டிற்குள்ளான ஆசிரியர் சிவரஞ்சித்தை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருபவர் மிதுன். பள்ளிக்கு வழக்கம்போல் சென்ற மாணவன் மிதுன், யூனிபார்ம் இறுக்கமாக அணிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவனிடம் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சிவரஞ்சித் கேட்டுள்ளார். மாணவரும் சட்டை ரொம்ப பெரிதாக இருந்ததாகவும் அதனால் ஆல்ட்டர் செய்து போட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே மாணவர் மிதுன் கூறிய காரணங்களை ஏற்றுக்கொள்ளாத ஆசிரியர் மாணவனை மிகக் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மாணவன் வலியால் அலறி துடிக்கும் அளவுக்கு, தொடர்ந்து 20 நிமிடங்கள் ஆசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது. 

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் வகுப்பில் இருந்த ஆசிரியர்கள் ஓடி வந்து மாணவரை மீட்டனர். இதில் மாணவருக்கு கை, காது, முதுகு உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து மாணவனின்  பெற்றோரிடம் தெரிவிக்கபட்டது. மேலும்  ஆசிரியர் அடித்ததில் காயமடைந்த மாணவனை சிகிச்சையாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் மாணவன் கொடுத்த பேட்டியில், பள்ளி சார்பில் கொடுக்கப்பட்ட சீருடை எனக்கு சரியாக பொருந்தவில்லை. இதன் காரணமாக அதனை ஆல்ட்டர் செய்து அணிந்து வந்தேன். இதற்காக தகாத வார்த்தையில் தன்னை பேசியதுடன் கொடூரமான முறையில் தன்னை அனைவர் முன்னிலையிலும் ஆசிரியர் அடித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு ஆசிரியர் தன்னை தாக்கி விட்டதாக கூறினார். ஆசிரியரின் இந்த கொடூர செயலை மாணவனின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் கண்டித்துள்ளனர். மேலும் இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இந்நிலையில் மாணவனை தாக்கிய குற்றச்சாட்டிற்குள்ளான ஆசிரியர் சிவரஞ்சித்தை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

click me!