காலாவதியான பிஸ்கெட் பாக்கேட்டை விற்ற கடைக்காரர்.. ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

By Thanalakshmi VFirst Published Aug 11, 2022, 6:02 PM IST
Highlights

கன்னியாகுமரியில் காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டை விற்ற கடைக்காருக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 
 

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த காஜா ரமேஷ் ராஜா என்பவர், நாகர்கோவில் கே.பி.ரோட்டில் உள்ள கடை ஒன்றில் ரூ.145 கொடுத்து சுகர்கிராக்கர் என்ற பிஸ்கெட் பாக்கெட் ஒன்றை  வாங்கியுள்ளார். இந்த பிஸ்கேட் பாக்கெட்டை வாங்கி சாப்பிட்ட, காஜா ரமேஷ் ராஜாவின் தாயாருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க:அட கடவுளே !! அடி பம்போடு சேர்த்து போடப்பட்ட கழிவு நீர் கால்வாய்.. ஒப்பந்ததாரரை கைது செய்த போலீஸ்..

இதனையடுத்து உடனே பிஸ்கெட் பாக்கெட்டின் தயாரிப்பு தேதி பார்த்த போது, அது காலாவதியாகியிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர், சம்பந்தப்பட்ட கடைக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன் பிறகும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

மேலும் படிக்க:என்ன நிர்வாணமா நிக்க வச்சு நகை போட்டு அழகு பாப்பாரு.. சேகர் சேட்டை குறித்து சுவாதி அதிர்ச்சி தகவல்.!

இந்த வழக்கை குமரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் கடைக்காரரின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட காஜா ரமேஷ் ராஜாவுக்கு நஷ்ட ஈடாகவும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.13 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட கடைக்காரர் வழங்க வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
 

click me!