
கடலூர் அருகே மாமியாரை கொலை செய்த மருமகளுக்கும் அதற்கு உடந்தையாக இருந்த கள்ள காதலனுக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிறகிழந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன், இவர் வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்சவள்ளி. இவர்களுக்கு புவனேஷ், யோகேஷ், இரண்டு என்ற இரு மகன்கள் உள்ளனர்.
லட்சுமணனின் தம்பி இளவரசனின் நண்பரான காளிரத்தினம் இளவரசனை சந்திக்க அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும்போது, அம்சவள்ளியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம், அம்சவள்ளியுடன் காளிரத்தினம் தனிமையில் இருந்ததை கண்ட லட்சுமணனின் தாய் மீனாட்சி மருமகளை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அம்சவள்ளி, தனது கள்ளக்காதலனுடன் இணைந்து மீனாட்சியை அம்மி கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இந்த வழக்கு கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம்,
மாமியாரை கொலை செய்த மருமகள் அம்சவள்ளி, கள்ளக்காதலன் காளிரத்தினம் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.