பெங்களூருவில் தக்காளியை கொள்ளையடித்து சென்னையில் விற்ற தமிழக தம்பதி.!சிக்கியது எப்படி.?

By Ajmal Khan  |  First Published Jul 23, 2023, 10:27 AM IST

பெங்களூரில் சொகுசு காரில் வந்து இரண்டு டன் தக்காளியை கொள்ளையடித்த தமிழக தம்பதியை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள மூன்று பேரை தேடி வருகின்றனர். 


பெங்களூரில் தக்காளி கொள்ளை

தங்கத்தை போன்று தக்காளி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பெங்களுரில் 2 டன் தக்காளியை கடத்தி சென்னை விற்பனை செய்த தமிழக தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.  பெங்களூர் ஆர் எம் சி யார்ட் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த கடந்த 9-ம் தேதி இரவு சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் பகுதியை சேர்ந்த விவசாய போரலிங்கப்பா, அவரது நிலத்தில் பயிர் செய்திருந்த 250 கிலோ தக்காளியை கோலார் நகரில் உள்ள தக்காளி சந்தைக்கு வாகனத்தில் எடுத்து சென்றார். அவரது வாகனத்தை மறித்த மர்ம கும்பல் டிரைவர் மற்றும் விவசாயி போரலிங்கப்பாவை தாக்கி குட்டி லாரியை கடத்தி சென்றது. 

Tap to resize

Latest Videos

இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அந்த வாகனம் சென்னையை நோக்கி பயணிப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து இதை அடுத்து சுங்கச்சாவடி மற்றும் சென்னைக்கு செல்லும் சாலையில் உள்ள பிற சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது கடத்திச் செல்லப்பட்ட வாகனத்தின் பின்னாலே கருப்பு நிற சொகுசு கார் ஒன்று பயணித்திருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.  அதில் இருந்த பதிவு எண்ணை வைத்து விசாரணையை தொடங்கிய போது அந்த காருக்கு சொந்தமான நபர் சென்னையைச் சேர்ந்த பாஸ்கர் என தெரியவந்தது. தொடர் விசாரணையில் இந்த கொள்ளையில் ஈடுபட்டவர் பாஸ்கர், அவரது மனைவி சிந்துஜா மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் என தெரியவந்தது. 

தக்காளி வாகனத்தை திருடிச் சென்று சென்னையில் தக்காளியை 3 லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டு  பின்னர் வாகனத்தை மீண்டும் பெங்களூருக்கு கொண்டு வந்து எஸ்வந்த்பூர் பகுதியில் விட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து தம்பதியினரை கைது செய்த போலீசார், அவர்களுடன் கொள்ளையில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.

click me!