கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கப்படும்.. விரைவில் ஆலோசனை.. அமைச்சர் தகவல்

Published : Mar 25, 2022, 08:22 PM IST
கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கப்படும்.. விரைவில் ஆலோசனை.. அமைச்சர் தகவல்

சுருக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுவதுமாக நீக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாவது அலை:

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. ஜனவரி மாதம் நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 30,000 ஐ கடந்தது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கபட்டன. முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, நேர கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அமலுக்கு வந்தன.  கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு தளங்களுக்கு செல்வதற்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பள்ளிகள், கல்விநிறுவனங்களில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் முறையில் பாடங்கள் எடுக்கப்பட்டன.

இன்றைய நிலவரம்:

இந்நிலையில் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த பாதிப்பு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. தற்போது ஒரு நாள் கொரோனா பாதிப்பு 50 க்கும் கீழ் குறைந்துள்ளது.  அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 41 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 37 ஆக குறைந்துள்ளது. 2020 மார்ச் 30 ஆம் தேதிக்கு பிறகு 4வது முறையாக 50க்கும் கீழே கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு:

இதனால் தமிழகத்தில் அமலுக்கு இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலும் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக , அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு, நேர கட்டுப்பாடு உள்ளிட்டவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கொரோனா தொற்று குறைந்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுவதுமாக நீக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு விட்டோம்' எனக் கருதாமல், இன்னும் மூன்று மாதங்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.தமிழகத்தில், 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசியும் 1.30 கோடி பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட வேண்டியுள்ளது. தினமும் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 2 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. நாளை 26வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று கூறினார்.

முழு கட்டுப்பாடுகளும் நீக்கம்:

இதனிடையே, தமிழக அரசு ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில், முதலமைச்சர் தலைமையில் விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தி, மீதமுள்ள ஓரிரு கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்று தெரிவித்தார். கடந்த 15 நாட்களாக கொரோனா பாதிப்பு, 100க்கு கீழ் பதிவாகி உள்ளது. கொரோனா மரணங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளது. அதேநேரம், அண்டை மாநிலங்களில் 500 முதல் 1,000 வரை தினசரி பாதிப்பு உள்ளது.ஆசிய நாடுகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தென் கொரியாவில் தினசரி, 4 லட்சத்தையும் தாண்டி தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க: TN Corona: படிப்படியாக குறையும் கொரோனா… இன்று 37 பேருக்கு தொற்று உறுதி!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!
எமர்ஜென்சி எக்ஸிட்..! விஜய் கூட்டத்திற்கு முன்னேற்பாடு.. கலக்கும் புதுவை பெண் போலீஸ் அதிகாரி