தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா, ஒமைக்ரான் பாதிப்புகளினால் கொரோனா ஊரடங்கில் மேலும் கட்டுபாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1489 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே வாரத்தில் தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை 597இல் இருந்து 1489 ஆக உயர்ந்துள்ளது.தலைநகர் சென்னையில் மட்டும் ஒரேநாளில் 682 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி தொற்று எண்ணிக்கையான 125ஐ விட சுமார் 5 மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 25ஆம் தேதி 12 ஆயிரமாக இருந்த பரிசோதனைகள் தற்போது 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே கொரோனாவின் புதிய வடிவமான ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை தமிழகத்தில் 121 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 120 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த நபர் ஆந்திராவில் இருக்கிறார். தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 91 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 27 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இதில் 64 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் எந்த விதத்திலும் தொடர்பில் இல்லாதவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
undefined
இதுபோல் நாட்டில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு 1525 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 460 பேருக்கும் தலைநகர் டெல்லியில் 351 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஒமைக்ரான் தொற்றும் பாதிப்பு எண்ணிகையில் முன்றாவது இடத்தில் உள்ளது. கேரளாவில் 109 பேருக்கு இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27, 553 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முந்தைய நாள் ஒப்பிடுகையில் 35 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் தினசரி பாதிப்பு கடந்த 4 நாட்களில் சுமார் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 284 பேர் கொரோனாவிற்கு உரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து 9249 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், நாடு முழுவதும் 1,22,801 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா, ஒமைக்ரான் பாதிப்புகளினால் கொரோனா ஊரடங்கில் மேலும் கட்டுபாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஜனவரி 10 ஆம் தேதி பல்வேறு கட்டுபாடுகளுடன் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டது. மேலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்த அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டது. இது மட்டுமில்லாமல், உணவகங்கள்,ஹோட்டல்கள், அடுமனைக, தியேட்டர் ஆகியவற்றில் 50% மக்கள் மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டது.
மாநகராட்சி சார்பில் சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல இன்றுமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகம் கூடுவதை தடுக்கும் பொருட்டு சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல நாளை முதல் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நடைபயிற்சி செல்வோருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக, மறு உத்தரவு வரும்வரை, பொதுமக்களுக்கு மணற்பரப்பில் அனுமதியில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.