தொடர்ந்து காவு வாங்கும் "நீட்"! தமிழகத்தில் தடை செய்தே ஆகணும்! திருவள்ளூரில் முழக்கம்...

First Published Jun 8, 2018, 7:05 AM IST
Highlights
Continuous death by Neet Ban neet in Tamil Nadu


திருவள்ளூர்

தொடர்ந்து மாணவர்களை காவு வாங்கும் நீட் தேர்வை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று திருவள்ளூரில் திமுக மாணவர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"தமிழகத்தில் நீட் தேர்வால் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்". 

"நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நீட் தேர்வைத் தடை செய்ய வேண்டும்" என்று திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற இந்த கண்ட ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வெற்றி என்கிற ராஜேஷ் தலைமை வகித்தார். 

இதில் மாணவரணி அமைப்பாளர்கள் கும்மிடிப்பூண்டி  நகரம் அக்கீம், மீஞ்சூர் தெற்கு விக்னேஷ் உதயன், மீஞ்சூர் வடக்கு பிரபு, கும்மிடிப்பூண்டி பேரூர் அசார், ஒன்றிய துணை அமைப்பாளர் கவின், 

இளைஞரணி அணைப்பாளர் பாலா, துணை அமைப்பாளர் ஜோதி, கும்மிடிப்பூண்டி தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆர்.கே.சரண்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன், நகரச் செயலாளர் அறிவழகன், துணைச் செயலாளர் பாஸ்கரன், மாவட்ட பிரதிநிதி இஸ்மாயில், பொறியாளர் அணி மாவட்டத் துணை அமைப்பாளர் கோகுல்நாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கி.வேணு,  "நீட் தேர்வு தமிழக மக்களின் உரிமையைப் பறிக்கும் செயல். இதனைத் தடுக்க முயலாமல் மத்திய அரசுக்கு தமிழக அரசு பணிவதால் மாணவர்களின் எதிர்காலம் அழிகிறது" என்று பேசினார். 

அதனைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும்,  நீட் தேர்வைத் தடை செய்யக் கோரியும் திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாணவர் அணி நிர்வாகிகள் சாண்டில்யன், திராவிட பக்தன், பூண்டி வேல்முருகன், குப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

click me!