
உயர்ந்து வரும் சமையல் கியாஸ் மற்றும் பெட்ரோல் விலை
நாட்டில் விலைவாசி அதிகரித்து கொண்டே வரும் சூழ்நிலையில் மக்களது அன்றாடத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்வது மிகவும் சிரமமாகவுள்ளது .ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பணவீக்கம் 4.2 % லிருந்து 4.6 % ஆக உயர வாய்ப்புள்ளது என கூறியுள்ளது .
பெருகி வரும் விலைவாசி பயத்தால் மக்கள் தங்களது ஆடம்பர செலவைக் குறைத்துக் கொண்டாலும் ,அவர்களது அன்றாட வாழ்க்கைக்கு தேவையானதை வாங்குவதில் கூட மிகவும் சிரமங்கள் எழுந்துள்ளன . அந்த வகையில் மிகவும் அடிப்படையான ஒன்று தான் பெட்ரோல் , கியாஸ் ,டீசல் இவைகளை நம்மால் கண்டிப்பாக பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது . ஆனால் அவற்றின் விலை ஏறும் போது நமக்கு தலையே சுத்துகின்றது.
'வரவு எட்டணா செலவு பத்தணா ' என்ற பழமொழிக்கு ஏற்றவாறு விலைவாசி மலையளவு உயர்ந்துள்ளது .கியாஸ் விலை மாத மாதம் உயர்ந்து வருகின்றது,அதேபோல பெட்ரோல், டீசல் விலையும் கடந்த ஜூன் 16 தேதி முதல் உலக கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற,இறக்கத்திற்கேற்ப இவற்றின் விலையும் அதிகரித்த வண்ணம் உள்ளது
மக்கள் பயன்படுத்தும் வகையில் பிரதமர் மோடி கடந்த 2015 -ல், ஒரு கூட்டத்தில் பேசும் போது . 'வசதி படைத்தவர்கள் தாங்களாகவே முன் வந்து மான்யம் வேண்டாம் என தெரிவித்தால் வரவேற்கிறேன் என தெரிவித்தார். இதன் மூலம் ஒவ்வொரு ஏழை வீட்டிலும் அடுப்பெரிய வைக்க உதவும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்டது தான் இந்த திட்டம்
இதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு பணக்காரர்கள் தங்களுக்கு மான்யம் வேண்டாம் என முன் வந்தனர்,மேலும் ரூ .10 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் வாங்குபவர்களுக்கும் மான்யம் நிறுத்தப்பட்டது .
இப்படி மான்யம் நிறுத்தியவர்களுக்கு போனஸ் எதுவும் தராமல் கியாஸ் விலையை அதிகரித்தது தான்அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது .கடந்த ஜூன் மதம் 1 -ஆம் தேதியன்று மானியத்தோடு கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.434 .15 அக இருந்தது .ஆனால் தற்போதோ ரூ.479 .11 ஆக உயர்ந்துவிட்டது .
இதை விட பெரிய கொடுமை என்னவென்றால்,மான்யம் வேண்டாம் என சொன்னவர்களுக்கு கியாஸ் விலை எவ்வளவு என்று தெரியுமா? சொன்னால் நம்மால் நம்பவே முடியாது . கியாஸின் விலை ரூ .656 .50 ஆக உள்ளது . கடந்த 2 மாதத்தை ஒப்பிடும் போது ரூ, 121 .50 உயர்ந்துள்ளது . இதை விட மோசம் வர்த்தக வணிகர்கள் பயன்படுத்தும் கியாஸின் விலை ரூ. 1 ,224 .50 ஆக உயர்ந்துள்ளது .
மொத்தத்தில் மத்திய மாநில அரசுகள் இணைந்து பெட்ரோல் ,டீசல் ,கியாஸ் விலையை சற்று குறைத்தால் ,பொது மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரிய தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க முடியும் .ஆனால் மக்கள் எல்லோருடைய மனதிலும் ஒரு கோரிக்கை இருக்கிறது . பெட்ரோல் ,டீசல் ஆடம்பர பொருள் அல்ல. அவை அத்தியாவசிய பொருள் என்ற வகையில் சமையல் கியாஸ், பெட்ரோல்.டீசல் சேவை சரக்கு வரிகளை ஒரு வளையத்தில் கொண்டு வந்தால் மிகவும் நல்லதாக இருக்கும் என மக்கள் கருதுகின்றனர்.