
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித், சற்று முன் சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஆளுநர் பன்வாரிலாலை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மக்களவைத் துணை தலைவர் தம்பிதுரை, அமைச்சர்கள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய ஆளுநரை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நாளை பதவியேற்கிறார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஆளுநருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.