Udhayanidhi Stalin Chennai : இன்று அக்டோபர் 12ம் தேதி, சென்னையில் நடந்த ஒரு தனியார் தொலைக்காட்சி Conclave நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். அவர் என்னென்ன பேசினார் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
உதயநிதி பேசியது உன்ன?
தென்னிந்தியா மாநிலங்கள் மிகசிறந்த முறையில் செயல்பட்டு வரும்போதும் கூட, அவற்றுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய சதி நடந்து வருகின்றது என்று கூறினார். 1970களில் துவக்கத்தில், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்தது. அப்போது தென்னிந்திய மாநிலங்கள் தான் அந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்தின என்றார் அவர்.
undefined
தென்னிந்தியா மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது, மேலும் அந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தாத மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், அதன் மக்கள்தொகை அதிக விகிதத்தில் தொடர்ந்து வளர்ந்து வந்தது. இது தென்னிந்திய மாநிலங்களின் மக்கள்தொகை பங்கை குறைத்தது. ஆனால் அதுவே தென்னிந்தியா மாநிலங்களுக்கு எதிராக செயல்பட இப்பொது பயன்படுத்தப்படுகிறது என்றார் உதயநிதி.
உங்கள் அனைவருக்கும் தெரிந்ததுபோல, அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள்தொகை விகிதத்தின் அடிப்படையில் இடங்களைப் பெற வேண்டும். மற்றும் தொகுதிகள் மக்கள்தொகை அளவிற்கு சமமாக இருக்க வேண்டும். இந்தக் கோட்பாட்டிற்கு இணங்க, 1952 மற்றும் 1963 ஆம் ஆண்டுகளில், எல்லை நிர்ணய ஆணையங்கள் உருவாக்கப்பட்டன.
இந்த ஆணைக்குழுக்கள் இரண்டு விஷயங்களைப் பரிந்துரைத்தன. அவை, மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் சட்டமன்ற இடங்களின் எண்ணிக்கை ஆகும். 1970களில் மக்கள் தொகையைக் குறைக்க மத்திய அரசு மாநிலங்களைத் தள்ளியது, இந்த கொள்கை அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் கைவிடப்பட்டது. 1976 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டத் திருத்தம் 2000 ஆம் ஆண்டு வரை மக்களவையின் இடங்களின் எண்ணிக்கையை முடக்கியது என்றார் அவர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்நிலையில் 2001ல், இந்தப் பிரச்னை வந்தபோது, இடங்களை இழக்கக் கூடிய நிலையில் இருந்த மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தப் போராட்டத்தால், அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மற்றொரு அரசியல் சட்டத் திருத்தத்தை முன்னெடுத்தது. அது தான் அரசியலமைப்பின் 84 வது திருத்தம், இது அந்த முடக்கத்தை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டித்தது, அதாவது 2026 வரை.
NDA கொண்டுவந்த அந்த முடக்கம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடியவுள்ளது. எனவே, எல்லை நிர்ணயம் நம்மை எவ்வாறு பாதிக்கும் என்றால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களும் லோக்சபாவில் தங்கள் இடப் பங்கை இழக்கும் என்பது தெளிவாகிறது என்றார்.
ஆகவே மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை மாற்றாமல் எல்லை நிர்ணயம் செய்தால், தமிழகம் தற்போது உள்ள 39 இடங்களிலிருந்து 8 இடங்களை இழந்து 31 இடங்களை மட்டுமே பெரும் என்றும் அமைச்சர் உதயநிதி கூறினார்.