கர்ப்பிணி கள்ளக்காதலியை கொன்ற காங்கிரஸ் பிரமுகர்! கடலூரில் பயங்கரம்...

Asianet News Tamil  
Published : Feb 26, 2018, 11:41 AM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
கர்ப்பிணி கள்ளக்காதலியை கொன்ற காங்கிரஸ் பிரமுகர்! கடலூரில் பயங்கரம்...

சுருக்கம்

Congressman to kill pregnant woman

கர்ப்பிணி கள்ளக்காதலியை கொன்று காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மேலகீரப்பாளையத்தை சேர்ந்தவர் சகாதேவன். இவர் காங்கிரஸில் வட்டார தலைவர் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சித்ரா கணவரை பிரிந்து தற்போது திருச்சியில் தனியாக வசித்து வருகிறார்.
மேலகீரப்பாளையத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி முருகேஸ்வரி. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகேஸ்வரி கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்தநிலையில், மனைவியை பிரிந்த சகாதேவனுக்கும், கணவனைப் பிரிந்த முருகேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அருகில் உள்ள திருப்பணிநத்தம் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இதில் முருகேஸ்வரி கர்ப்பம் அடைந்தார்.

தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். சகாதேவனுக்கு அதிகமாக கடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் சகாதேவனுக்கும், முருகேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சகாதேவன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இந்தநிலையில், அவரது வீட்டின் கதவு கடந்த 2 நாட்களாக பூட்டிக்கிடந்தது. அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் புவனகிரி போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர், சகாதேவன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தால் அங்கு சகாதேவன் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையிலும், முருகேஸ்வரி தரையில் பிணமாக கிடந்தார். 2 பேரின் உடல்களும் அழுகிய நிலையில் காணப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக உடல்களை மீட்டு போலீசார் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பிணி கள்ளக்காதலியை கொன்று தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கள்ளக்காதல் கணவனும் இறந்துள்ள இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது... எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்..
தமிழகத்தில் ஏப் 1 முதல் எகிறப்போகும் டோல்கேட் கட்டணங்கள்..! 28 டோல்களுக்கான புதிய தொகை அறிவிப்பு..