
திருவண்ணாமலை
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை கொன்ற சம்பவத்தை கண்டித்து காங்கிரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரசு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா சிலை அருகில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார் முன்னிலை வகித்தார். நகர தலைவர் வெற்றிசெல்வன் வரவேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், "பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும்,
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை கொன்ற சம்பவத்தை கண்டனம்" தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தமிழ் அரசு, புருஷோத்தமன், அன்பு, மோகன், காமராஜ், மாவட்ட துணைத்தலைவர் மணி, ராஜ், சீனிவாசன், பொருளாளர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.