பிறப்பு, இறப்பு சான்றிதழ்களின் விலை உயர்வைக் கண்டித்து நவம்பர் 10-ஆம் தேதி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்…

 
Published : Nov 02, 2017, 10:00 AM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களின் விலை உயர்வைக் கண்டித்து நவம்பர் 10-ஆம் தேதி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்…

சுருக்கம்

Congress Demonstration on November 10 condemning the price rise of birth and death certificates ...

ஈரோடு

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களின் விலை உயர்வைக் கண்டித்து நவம்பர் 10-ஆம் தேதி காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.

ஈரோடு மாநகர் மாவட்டக் காங்கிரசு கட்சித் தலைவர் ஈ.பி.ரவி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், “உள்ளாட்சி அமைப்புகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களைப் பெறுவதில் முதல் நகல் வாங்குவதற்கு ரூ.17, அதற்கு மேல் ஒவ்வொரு நகலுக்கும் ரூ.5 கட்டணமாக செலுத்தி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசு கட்டண உயர்வை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதில் ஒவ்வொரு நகல் வாங்குவதற்கும் ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்களால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களின் விலை உயர்வை கண்டிக்கிறோம்.

மேலும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 10–ஆம் தேதி ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு