பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் உருவபொம்மையை எரித்து கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்…

 
Published : Nov 02, 2017, 09:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் உருவபொம்மையை எரித்து கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்…

சுருக்கம்

Communist Party fight burning the image of BJP and RSS

திண்டுக்கல்

கம்யூனிஸ்டு கட்சியின் செங்கொடியை எரித்த பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் பெயர் எழுதிய உருவபொம்மையை எரித்து திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் அருகே அந்தக் கட்சியின் செங்கொடி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினரால் சேதப்படுத்தப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித்தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிச் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாண்டி, நகர செயலாளர் ஆசாத் மற்றும் நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், அரபுமுகமது உள்பட பலர் பங்கேற்றனர்.

அப்போது கட்சிக் கொடியை சேதப்படுத்தியதற்காக பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத வித்யார்த்தி பரி‌ஷத் அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவித்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழக்கமிட்டனர்.

பின்னர் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத வித்யார்த்தி பரி‌ஷத் அமைப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவற்றின் பெயர்கள் எழுதப்பட்ட உருவபொம்மையை தீவைத்து எரித்தனர்.

இதனைத் தடுக்க திண்டுக்கல் வடக்கு காவல் ஆய்வாளார் தெய்வம் தலைமையிலான காவலாளர்கள் முயற்சித்த்னர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், காவலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்தியே ஆகணும்..! அதிமுக கூட்டணிக்கு வருகிறது தவெக..? இபிஎஸ் சொன்ன முக்கிய தகவல்..!
ஜனவரி 7ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு