கரூரில் பிரச்சாரத்திற்கு செல்ல ஏற்பட்ட காலதாமதம் காரணமாக பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி சென்று பெண்களிடம் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மன்னிப்பு கேட்டார்.
கரூர் தொகுதியில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோதிமணி தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த இளைஞர்கள்; கைகொடுத்து ஊக்கப்படுத்திய ஆ.ராசா
undefined
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி இன்று கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, ஆத்தூர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மக்களை ஏமாற்றுவதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசே வழங்கலாம் - பழனிசாமி விமர்சனம்
அப்போது ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்திற்கு செல்ல ஏற்பட்ட கால தாமதம் காரணமாக, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி பெண்கள் ஆரத்தி தட்டுடன் காத்துக் கொண்டிருந்தனர். இதனை அடுத்து அந்தப் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்ற ஜோதிமணி பிரச்சார வாகனத்தை விட்டு கீழே இறங்கி, பதறியடித்துக் கொண்டு ஓடிச் சென்று, ஆரத்தி தட்டுடன் காத்துக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜோதிமணி தான் பொறுப்பு வகித்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.