மெர்சல் படம் பார்க்கவந்த ரசிகர்ளிடையே மோதல்; நான்கு பேரின் மண்டை உடைந்தது...

Asianet News Tamil  
Published : Oct 19, 2017, 07:28 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
மெர்சல் படம் பார்க்கவந்த ரசிகர்ளிடையே மோதல்; நான்கு பேரின் மண்டை உடைந்தது...

சுருக்கம்

Confrontation between fans watching Mersel Break the skull of four ...

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் மெர்சல் படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் நான்கு பேரின் மண்டை உடைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

உலகத்தின் பல்வேறு இடங்களில் தீபாவளியும், மெர்சல் திரைப்படமும் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் இரண்டு விழாக்களும் களைகட்டியது.

அதிலும், தீபாவளியால் கடந்த வருடம் இல்லாத அளவுக்கு புகை மூட்டம் இந்த அளவுக்கு காணப்பட்டதாம். இரயில்கள் எல்லாம் கூட தாமதமாகவும், பொறுமையுடனும்தான் சென்றன.

விஜய் ரசிகர்ளுக்கு இந்த வருடம் மெர்சல் தீபாவளிதான். பேனர், போஸ்டர், கட் அவுட், பிளெக்ஸ் என அதகளம் பண்ணினர். கோலாகல கொண்டாட்டத்தில் விபத்துகள் நடைபெறுவது இயல்பே. சில சமயங்களில் விபத்துகளை காட்டிலும் வாய்தகராறால் ஏற்படும் விளைவுகல் அதிகம்.

காஞ்சிபுரத்தில் விஜய் ரசிகர் ஒருவர் மெர்சல் பட பேனர் வைக்கும்போது தண்ணீர் தொட்டியின் சுவர் இடிந்து விழுந்ததில் தலை நசுங்கி பலியானார். இதனால் அவரது நண்பர்கள், பெற்றோர் உறவியனரிடையே பெரும் சோகத்தை ஏற்பட்டது. இது விபத்து.

அப்போ வாய்தகராறு எங்கேனு கேட்கிறீர்களா? தஞ்சாவூரில்…

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் மெர்சல் படம் பார்ப்பதற்கு வந்த விஜய் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. திரையரங்கில் இருக்கையில் உட்காருவது குறித்து இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாய்தகராறு மோதலாய் முற்றியது.

இந்த மோதலில் விஜய் ரசிகர்கள் நால்வரின் மண்டை உடைக்கப்பட்டது.

மெர்சலை இந்த அளவுக்கு மிரளும் வகையில் கொண்டாடியவர்கள் இவர்களாகதான் இருக்கும்.

காயமடைந்தவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை! சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!
TASMAC: விஜய் ஆட்சியில் டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி.. இனி இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!