தமிழிசையை கண்டித்து வெடிக்கும் ஆர்ப்பாட்டங்கள்; பட்டையை கிளப்பும் பாமக...

 
Published : Jun 29, 2018, 11:11 AM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
தமிழிசையை கண்டித்து வெடிக்கும் ஆர்ப்பாட்டங்கள்; பட்டையை கிளப்பும் பாமக...

சுருக்கம்

condemned tamilisai soundararajan pmk held in demonstrations

நாகப்பட்டினம்

தமிழிசை சௌந்தரராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாகப்பட்டினத்தின் பல்வேறு இடங்களில் பா.ம.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குறித்தும், பா.ம.க. குறித்தும் விமர்சனம் செய்த பாரதீய ஜனதா கட்சி தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்து நேற்று பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஔரித்திடலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டட்தில், “தமிழிசை சவுந்தரராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாகை நகரச் செயலாளர் மகேஷ் தலைமை வகித்தார். இதில் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்பட பா.ம.க.வினர் பங்கேற்றனர்.

இதேபோன்று நாகப்பட்டினம் மாவட்டம்,  கீழ்வேளூரை அடுத்த ஆந்தகுடி கடைத்தெருவிலும் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட துணை செயலாளர் வைர.சிவக்குமார் தலைமை வகித்தார். கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் அரிகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

“பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் செந்தில், மணிகண்டன், குரு உள்பட பா.ம.க.வினர் பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஒன்றிய உழவர் பேரியக்க செயலாளர் சுப்பிரமணியன் நன்றி தெரிவித்தார்.  

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை