பிரேக் பிடிக்காத லாரி மோதியதில் பைக்கில் சென்றவர உடல் நசுங்கி பலி...

 
Published : Jun 29, 2018, 11:02 AM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
பிரேக் பிடிக்காத லாரி மோதியதில் பைக்கில் சென்றவர உடல் நசுங்கி பலி...

சுருக்கம்

body crushed man died by lorry hits which is breakdown

மதுரை

பிரேக் பிடிக்காததால் லாரியை கொண்டுபோய் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மதுரையில் பரிதாபமாக ஒருவர் பலியானார்.

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் அழகர்சாமி (40). இவர் திருநெல்வேலி மின்வாரியத்தில் பொறியாளராக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் எல்லீஸ்நகர் பாலம் இறக்கத்தில் பெரியார் பேருந்து நிலையம் நோக்கிச் சென்றார். அப்போது லாரி ஒன்று அவருக்கு பின்னால் வேகமாக வந்துக் கொண்டிருந்தது. லாரியில் பிரேக் பிடிக்காததால் மோட்டார் சைக்கிள் மீது அதிபயங்கரமாக மோதியது.

இதில் அழகர்சாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இந்த விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கரிமேடு போக்குவரத்து காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். அழகர்சாமி உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னர் லாரி ஓட்டுநரான உசிலம்பட்டியைச் சேர்ந்த கணேசனை(27) காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நான் 2026 ல் போட்டியிட மாட்டேனா ? விஜய்யை நிற்க வைத்து கேளுங்கள் - சரத்குமார் பேட்டி
20 மாவட்டங்களில் 60 அரசு பள்ளிகளில்! பள்ளிக்கல்வித்துறையில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்!