இனி பின் சீட்டில் உட்காருவோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்..! ஐகோர்ட் கடும் கண்டிப்பு!

Published : Sep 20, 2018, 01:48 PM ISTUpdated : Sep 20, 2018, 01:50 PM IST
இனி பின் சீட்டில் உட்காருவோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்..! ஐகோர்ட் கடும் கண்டிப்பு!

சுருக்கம்

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை முழுமையாக அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை முழுமையாக அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர்கள் ஹெல்மெட் அணிவது தொடர்பான வழக்கில் வாகனத்தில் செல்லும் இருவரும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதேபோல கார்களில் செல்வோர் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெல்மெட், சீட் பெல்ட் கட்டாயம் என்ற விதிகளை அமல்படுத்தக்கோரிய கே.கே.ராஜேந்திரன் வழக்கு தொடுத்தார். இதையடுத்து ராஜேந்திரன் வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

 

விசாரணையின்போது, தமிழகத்தில் மோட்டார் வாகன விதிகளிலேயே ஹெல்மெட், சீட்பெல்ட் கட்டாயம் என்பது உள்ளது. ஹெல்மெட் விதிகளை அரசும், காவல்துறையும் முறையாக அமல்படுத்துவதில்லை, அதனை அமல்படுத்துங்கள் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயம் அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இருசக்கர வாகனத்தை பொறுத்தவரையில், பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். மேலும் ஹெல்மெட் அணிவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இது தொடர்பாக செப்டம்பர் 22 ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

PREV
click me!

Recommended Stories

காலையிலேயே இல்லத்தரசிகள் அதிர்ச்சி! திடீரென 5000 உயர்வு! ரூ.3 லட்சத்தை நோக்கி வெள்ளி! அப்படினா தங்கம் விலை?
அதிகாலையில் அலறிய சென்னை! சினிமாவை மிஞ்சிய பயங்கரம்.! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி கொ**லை