திமுக கூட்டணியில் 20 தொகுதி கேட்கும் கம்யூனிஸ்ட்..? பொடி வைத்து பேசும் சண்முகம்

Published : Dec 25, 2025, 03:28 PM IST
P Shanmugam

சுருக்கம்

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை திமுக-விடம் கேட்போம் என வெண்மணி தியாகிகள் நினைவு தூணில் அஞ்சலி செலுத்திய சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

1968 ஆம் ஆண்டு நிலசுவாந்தர்களுக்கும், கூலி விவசாயிகளுக்கும் நடந்த வர்க்க போரில் 44 பேர் ஒரே குடிசையில் வைத்து எரித்து கொல்லப்பட்டனர். நள்ளிரவில் அரங்கேறிய இந்த கொடூர தீண்டாமை சம்பவத்தில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், பெண்கள் என 44 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் நடந்து 57 ஆண்டுகளை கடந்தாலும், கீழ்வெண்மணி கிராமத்தில் உள்ள வெண்மணி தியாகிகளின் நினைவு தூணில் வருடாவருடம் இடதுசாரி அமைப்புகள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், உள்பட பல்வேறு இடதுசாரி தலைவர்கள் வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சண்முகம் கூறுகையில், ஒரு குடும்பத்திற்கு 100 நாள் வேலை என்ற சட்டத்தை இடதுசாரி அமைப்புகள் உருவாக்கிய 100 நாள் வேலை திட்டம் பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க கூடிய திட்டமாக இருந்தது. இன்று பாஜக அரசு மகாத்மா காந்தி பெயரை மாற்றி எதிர்க்கட்சி எதிர்ப்பை மீறி பாஜக அரசு திட்டத்தின் பெயரை மாற்றியுள்ளது.

கோடிக்கணக்கான விவசாய தொழிலாளர்களின் உணர்வுகளை மதிக்காமல் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்றைய தினம் திமுக சார்பாக 400 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. ஏழைகளின் வயிற்றில் மத்திய அரசு அடிக்கக்கூடாது, ஏற்கனவே இருந்த மகாத்மா காந்தி பெயரிலான திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்களின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் திட்டம் உருவாக்கப்பட்டபோது வாக்காளர்கள் பட்டியலில் பெரும்பாலான பெயர்கள் நீக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்தது. தற்போது 1 லட்சத்துக்கும் மேலாக உயிரிழந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆகையால் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை.

சம்பா தாளடி விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு அறிவிக்கப்படவில்லை என்று கூறிய சண்முகம், ஏக்கருக்கு 8000 ரூபாய் என்பதை தமிழக அரசு மாற்றி தற்போதுள்ள உற்பத்தி செலவுக்கேற்ப இழப்பீட்டு தொகையின் அளவை உயர்த்த வேண்டும். நான்கு தொழிலாளர்கள் தொகுப்பு சட்டம் நவம்பர் 21 முதல் அமலுக்கு வந்துள்ளது, இவ்வளவு போராட்டம் நடத்திய பிறகும் தொழிலாளர் நலனை பாதிக்கும் இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

பாஜக - அதிமுக கூட்டணியை தோற்கடிப்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2026 சட்டமன்ற தேர்தல் அரசியல் நோக்கம். 1000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. தமிழக அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்தார். 20 சீட்டு முதல் 22 சீட்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டுள்ளது, ஆகையால் இந்த முறை திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்றும், தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் நின்றாலும் சிபிஎம் வெற்றிபெறும் என்று கூறினார். தமிழ்நாட்டில் அதிக அளவில் போதைப் பொருட்கள் பயன்பாடு இருப்பதே காவல்துறை நடவடிக்கை எடுப்பதால் மட்டுமே தெரிகிறது ஆகையால், அதற்கு பின்னர் யார் இருந்தாலும் பிடிக்க வேண்டும் என்று கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புதுச்சேரிக்கு எனது பாக்கெட்டில் இருந்து ரூ 100 கோடி செலவிட தயார்..! லாட்டரி மார்டின் மகன் போடும் பக்கா ஸ்கெட்ச்
பிரதமர் மோடி சர்ச்சுக்கு போய்ட்டாரு.. ஸ்டாலின் எப்போ இந்து கோயிலுக்கு போவாரு? தமிழிசை கேள்வி!