சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை... வணிகவரி மற்றும் பதிவுத்துறை அறிவிப்பு!!

By Narendran SFirst Published Oct 21, 2022, 6:53 PM IST
Highlights

சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை என வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் அறிவித்துள்ளார். 

சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை என வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் அறிவித்துள்ளார். சார்பதிவாளர் அலுவலகங்களில், ஆவணப் பதிவிற்கான டோக்கன் அனைத்து வேலை நாட்களிலும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கருத்தில்கொண்டு அதிகரித்துள்ள ஆவணப்பதிவுகளுக்கு ஏதுவாக சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதையும் படிங்க: தோட்டத்தில் உயிரிழந்த சிறுத்தை.. ஓபிஎஸ் மகன் எம்.பி ரவீந்திரநாத்திற்கு சம்மன் அனுப்பிய வனத்துறை..!

இந்த நிலையில் நாடு முழுவதும் வரும் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிக்கை கொண்டாடப்படுவதையொட்டி சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனிடையே சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமையும் இயங்கும் என்பதால் அவர்களுக்கு தொடர் விடுமுறை என்பது இல்லாத நிலை இருந்தது.

இதையும் படிங்க: இந்தியக் கடற்படையினரால் தமிழக மீனவர் சுடப்பட்ட விவகாரம்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

இதை அடுத்து சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை ஒருநாள் மட்டும் செயல்பாட்டிலிருந்து விலக்கு அளித்து விடுமுறை வழங்கிட தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம் கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையை ஏற்று 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை ஒருநாள் மட்டும் அலுவலக செயல்பாட்டிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் சனிக்கிழமைகளில் அவ்வலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் எனவும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதிநிர்மலாசாமி அறிவித்துள்ளார்.

click me!