
திருவாரூர்
கல்லூரிக்கு நிரந்தர முதல்வரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம், திரு.வி.க. கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் கல்லூரி தலைவர் அருண் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பிரகாஷ் பங்கேற்று பேசினார்.
இந்தப் போராட்டத்தில் "கடந்தாண்டு வழங்கப்படாமல் உள்ள கல்வி உதவித் தொகையை உடன் வழங்க வேண்டும்,
கல்லூரியில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
கல்லூரிக்கு நிரந்தர முதல்வரை நியமிக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் மதன், நகர செயலாளர் சுர்ஜித், கல்லூரி செயலாளர் சத்தியசீலன், மாவட்ட துணை செயலாளர் கவிநிலவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் தங்கள்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.